நாகையில் ரெயிலில் அடிபட்டு பிளஸ்-2 மாணவர் சாவு போலீசார் விசாரணை
நாகையில் ரெயிலில் அடிபட்டு பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்,
நாகையை அடுத்த சிக்கல் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் கீழ்வேளூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆகாஷ் (வயது 17). இவர் நாகையில் உள்ள சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன் தினம் தனது பள்ளியில் படிக்கும் நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் நாகை-திருவாரூர் ரெயில்வே தண்டவாளத்தில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில் ஆகாஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.
இந்தநிலையில் இரவு வெகுநேரமாகியும் ஆகாஷ் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். இதையடுத்து அதிகாலையில் ஆவராணி புதுச்சேரி ரெயில்வே கேட் அருகே ஆகாஷ் உடலை பார்த்த அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story