தனியார் சிமெண்டு ஆலைக்கு லாரிகளில் கொண்டு செல்லும் சுண்ணாம்புக்கற்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தனியார் சிமெண்டு ஆலைக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் சுண்ணாம்புக்கற்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமெண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சுண்ணாம்புக்கற்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அந்த ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்தும் வருகின்றன. அந்த சுரங்கங்களில் இருந்து சுண்ணாம்புக்கற்களை சிமெண்டு ஆலைக்கு எடுத்து செல்வதற்காக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, அரியலூர்-ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் லாரிகள் மூலம் சுண்ணாம்புக்கற்களை ஏற்றிக்கொண்டு சாலைகளில் செல்லும்போது சுண்ணாம்புக்கற்கள் சாலையில் விழுவதால், சாலையில் புழுதி பறக்கிறது. மேலும் லாரிகளின் சக்கரங்களில் ஒட்டியுள்ள சுண்ணாம்பு மண் சாலைகளில் படிகின்றன.
இதனால் மழை பெய்யும் போது சாலை சேறும், சகதியாக மாறி விடுகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுகின்றனர். விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் காயமடைவதோடு மட்டுமின்றி உயிர்சேதமும் ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மழைக்காலங்களில் சுரங்கங்களில் இருந்து சுண்ணாம்புக்கற்களை ஏற்றி செல்லும் லாரிகள் சாலைகளில் செல்வதற்கு முன்பு அதன் சக்கரங்களில் ஒட்டியுள்ள சுண்ணாம்பு மண்ணை அகற்ற வேண்டும். மேலும் லாரியின் மேல் சுண்ணாம்புக்கற்கள் வெளியே தெரியாதவாறு தார்ப்பாய் போட்டு முழுமையாக மூட வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் சிமெண்டு ஆலை நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story