காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2018 4:00 AM IST (Updated: 20 Oct 2018 10:05 PM IST)
t-max-icont-min-icon

காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் சுசீந்தரன் (வயது 20). காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்த நிலையில் சுசீந்தரன் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் இறந்துவிட்டார். அதே நினைவில் கடந்த 12–ந்தேதி மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தற்கொலை குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story