கும்பகோணம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை கிராம மக்கள் முற்றுகை
கும்பகோணம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே அம்மன்குடி-முருக்கங்குடி மெயின் சாலையில் நந்திவனம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடையை உடனடியாக மூடக்கோரி நேற்று கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடையை திறக்க வந்த ஊழியர்களை கிராம மக்கள் வழிமறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடையை ஊழியர்களால் திறக்க முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த கும்பகோணம் தாசில்தார் ஜானகிராமன், நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பள்ளி அருகே மதுக்கடை திறக்கப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என அதிகாரிகளிடம் முறையிட்ட கிராம மக்கள், மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அதிகாரிகள், கிராம மக்களிடம் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து மதுக்கடை திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்றது.

Related Tags :
Next Story