கம்பம் அருகே: குட்டியை தேடி வந்த தாய் யானை
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி வனப்பகுதியில் குட்டி யானையை தேடி வந்து தாய் யானை பிளிறியது.
கம்பம்,
கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சுருளிப்பட்டி வனப்பகுதியில் மிளா மான், காட்டுப்பன்றி, குரங்கு, காட்டெருமை, கரடி, நரி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும் வனப்பகுதியில் தேக்கு, தோதகத்தி, சந்தனம் உள்ளிட்ட விலையுயர்ந்த மரங்களும் உள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும், வன விலங்குகளை வேட்டையாடுவதை தவிர்ப்பதற்கும் வன ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி கடந்த 19-ந் தேதி சுருளிப்பட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் வனஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது கைலாயநாதர் குகையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஐந்து மாத பெண் குட்டி யானை இறந்து கிடந்தது. அந்த குட்டி யானை தாய் யானையுடன் உணவு தேடி வந்த போது பாறையில் வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் நேற்று முன்தினம் வனத்துறையினர் கால்நடை டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்து குட்டி யானை உடலை புதைத்தனர். பின்னர் வனத்துறையினர் அங்கிருந்து சென்றவுடன் தாய் யானை அந்த பகுதிக்கு வந்து குட்டி யானையை தேடியபடி பிளிறியது. பின்பு தாய் யானை அங்கேயே நின்று கொண்டிருந்தது.
Related Tags :
Next Story