திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது


திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 9:45 PM GMT (Updated: 21 Oct 2018 6:42 PM GMT)

திருமணமான பெண்ணை மிரட்டி கற்பழித்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் லோயர் பரேலில் உள்ள வங்கியில் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அடுத்த சில ஆண்டுகளில் பெண்ணுக்கு அதே வங்கியில் வேலை பார்த்த விகாஸ் கிருஷ்ணா(வயது38) என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு அந்த பெண், விகாஸ் கிருஷ்ணா உடனான உறவை முறித்து கொண்டு வேறு நபரை திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில் திருமணத்திற்கு முந்தைய உறவு பற்றி கணவரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டி விகாஸ் கிருஷ்ணா, அந்த பெண்ணை கற்பழித்து வந்துள்ளார். மேலும் அவரை ஆபாசமாக படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டி வந்தார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண், விகாஸ் கிருஷ்ணா மீது மெரின் டிரைவ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை மிரட்டி கற்பழித்து வந்த வங்கி ஊழியர் விகாஸ் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

Next Story