சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாரம்பரியம் பாதிக்காது திருமாவளவன் பேட்டி


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாரம்பரியம் பாதிக்காது திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2018 4:30 AM IST (Updated: 22 Oct 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் பாரம்பரியம் பாதிக்காது என திருமாவளவன் கூறினார்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 500 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி அன்று திருச்சியில் “தேசம் காப்போம்” என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 17-ந் தேதிக்குள் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்படும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, பாம்பும் சாகக்கூடாது, தடியும் நோகக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும். கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் ஐதீகமும், பாரம்பரியமும் பாதிக்காது. அது பெண்களுக்கான ஜனநாயக உரிமை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழினி, மாவட்ட செயலாளர் தமிழருவி, மண்டல செயலாளர் விவேகானந்தன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், கும்பகோணம் சட்டசபை தொகுதி செயலாளர் முல்லைவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story