திருவண்ணாமலையில் காவல்துறையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
திருவண்ணாமலையில் காவல்துறையில் உயிர் நீத்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி இந்தியா முழுவதும் பணியின் போது மரணமடைந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1.9.2017 முதல் 31.8.2018 வரை இந்தியா முழுவதும் காவல் துறையில் பணியின் போது மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் உள்ள ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி தலைமை தாங்கி, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறன் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடத்தி 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜன், அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு மரணம் அடைந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இதனையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, வினாடி- வினா மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story