தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்


தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2018 3:15 AM IST (Updated: 22 Oct 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

சேவூர் அருகே தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேவூர்,

சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சியில், முதலிபாளையம் கிராமத்தில் பழைய ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 150–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 600–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு தொடர்ந்து 2 மாதத்திற்கு மேலாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் தினமும் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதி அடைந்து வந்தனர். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் கடந்த 2 மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் போராட்டம் நாளையும்(இன்றும்) தொடரும். அதன்பின்னரும் நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.


Next Story