செல்லூர் கண்மாயில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆய்வு


செல்லூர் கண்மாயில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:00 PM GMT (Updated: 22 Oct 2018 2:20 PM GMT)

மதுரை செல்லூர் கண்மாயில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

மதுரை,

மதுரை செல்லூர் கண்மாய் சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அப்போது நீர்பிடிப்பு பகுதியில் 12 வீடுகள் அகற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து செல்லூர் கண்மாயை வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

 அப்போது அவர் நீர்பிடிப்பு பகுதியில் அகற்றப்பட்ட 12 வீடுகளில் இருந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் தரப்படும் என்று கூறியதுடன், அவர்களுக்கு நிதிஉதவி வழங்கினார். அதன்பிறகு ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறும்போது, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இந்த பகுதி மக்கள் செல்லூர் கண்மாயை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி ஏறத்தாழ ரூ.20 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது கண்மாய் நிரம்பி காணப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் பெருகி உள்ளதுடன், விளைநிலங்கள் பயன்பெறும் என்றார்.


Next Story