தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 5:57 PM GMT)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவ-மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலையில் நடந்தது. கல்லூரி முன்பு தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது பாளையங்கோட்டை ரோடு வழியாக சென்று, புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார்.

இதில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டன.

இந்த பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story