கால்டாக்சி டிரைவர் கொலையில் 9 பேர் கைது


கால்டாக்சி டிரைவர் கொலையில் 9 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 10:15 PM GMT (Updated: 2018-10-23T00:31:36+05:30)

சென்னை மந்தைவெளியில் நடந்த கால்டாக்சி டிரைவர் கொலையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடையாறு, 

சென்னை மந்தைவெளி மாநகர பஸ் பணிமனை அருகே கடந்த 19–ந் தேதி இரவு தேனாம்பேட்டையை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் சிவா என்பவர் ஒரு கும்பலால் ஓட, ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மயிலாப்பூர் உதவி கமி‌ஷனர் உக்கிரபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிபுகுமார், முருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை நடத்திவந்தது.

கொலை தொடர்பாக கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அப்பு (வயது 30), ராஜேஷ் (32), ராஜா (32), கோபால் என்கிற பாலா கன்னியப்பன் (35), சிட்டிபாபு (30), அஜித்குமார் (29), மூர்த்தி (34), நாராயணன் (35), கோபால் என்கிற பாலா(32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். 2017–ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் சீனிவாசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிவா கைதானார். இதற்கு பழிவாங்க சீனிவாசனின் நண்பர்களான 9 பேரும் திட்டமிட்டு சிவாவை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர். 9 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story