போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்


போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-23T00:53:33+05:30)

ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக கிளை வாயில் முன்பு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக கிளை வாயில் முன்பு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாட்டாளி தொழிற்சங்க பொது செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தொ.மு.ச செயலாளர் ராஜேந்திரன், தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட வேண்டும். தொழிலாளர்கள் நிலுவைத்தொகை ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி தர வேண்டும். விடுப்பு சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நீலமேகம், வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story