எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்களை மக்களுடைய ஆதரவோடு முறியடிப்போம் முதல்-அமைச்சர் பேச்சு


எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்களை மக்களுடைய ஆதரவோடு முறியடிப்போம் முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்களை மக்களுடைய ஆதரவோடு முறியடிப்போம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருமயம்,

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமான பி.கே.வைரமுத்து-இந்திரா தம்பதியின் மகன் குமாரசாமி-ரக்ஷாயணி திருமணம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் விராச்சிலை முருகன் கோவிலில் நேற்று காலையில் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.

தொடர்ந்து கோவிலின் அருகே அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.

விழாவில் மணமக்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் பி.கே.வைரமுத்து. அவருடைய இல்ல திருமணவிழாவில் நான் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கழகம் ஒரு குடும்பம். அ.தி.மு.க. குடும்பத்தில் நடைபெறும் அத்தனை திருமணத்திலும் இதே மகிழ்ச்சி காணப்படும். மகிழ்ச்சியோடு நாம் வாழ்வோம். மக்களுக்கு சேவை செய்வோம். எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்களை மக்களுடைய ஆதரவோடு முறியடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “இந்த திருமணவிழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நானும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்தி கொண்டு இருக்கிறோம். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா விட்டு சென்ற நலத்திட்டங்களையும் மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று கொண்டிருகிறது. நானும், எடப்பாடி பழனிசாமியும் இந்த கழகத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து எங்கள் பணியை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு எந்த சுனாமியும், எந்த பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களிடையே எந்தவித பிரச்சினையையும் யாரும், உருவாக்கிட முடியாது. எங்களை ஆட்டவோ? அசைக்கவோ? உள்ளேயும், வெளியேயும் யாரேனும் முயற்சி செய்தால், அது நடக்காது என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மாலை அணிவித்து வீரவாள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மண்டல ஐ.ஜி.வரதராஜூ தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள், 4 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருமண விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.க்கள் குமார், செந்தில்நாதன், புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கணேசன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆவடிதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சண்முகம், நகர செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் புதுக்கோட்டை குமார், திருவரங்குளம் (மேற்கு) ராஜேந்திரன், திருவரங்குளம் (கிழக்கு) துரை.தனசேகரன், கந்தர்வகோட்டை ரெங்கராஜன், அறந்தாங்கி (தெற்கு) பெரியசாமி, அறந்தாங்கி (வடக்கு) வேலாயுதம், அன்னவாசல் சாம்பசிவம், பொன்னமராவதி ராம.பழனியாண்டி, ஆவுடையார்கோவில் கூத்தையா, குன்றாண்டார்கோவில் பால்ராஜ், திருமயம் ராமு, கறம்பக்குடி சரவணக்குமார், விராலிமலை (கிழக்கு) திருமூர்த்தி, விராலிமலை (மேற்கு) சுப்பையா.

அரிமளம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திலகர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் இன்பவள்ளி திலகர், பூவரசகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வைத்திலிங்கம், அரிமளம் நகர செயலாளர் மாரியப்பன், திருமயம் தாலுகா விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணை தலைவர் மணிமுத்து, அரிமளம் ஒன்றிய பொருளாளர் பழனி, பொன்னமராவதி ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் துரை, திருமயம் ராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, அரிமளம் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாத்தையா, நகர அம்மா பேரவை செயலாளர் சேட் என்ற அப்துல்ரகுமான், அரிமளம் ஒன்றிய இலக்கிய அணி துணை செயலாளர் முத்து, அரிமளம் ஒன்றிய அவை தலைவர் மதகம் மாரிமுத்து, இணை செயலாளர் கற்பகசுந்தரிமுருகன், துணை செயலாளர் வள்ளிகண்ணுமணி, மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணியன், பரமசிவம், தமிழ்செல்வி சாத்தன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக புதுக்கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மாத்தூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும், லேணாவிலக்கு பகுதியில் அரிமளம் ஒன்றிய கழகம் சார்பிலும், விராச்சிலையில் திருமயம் ஒன்றிய கழகம் சார்பிலும் மேளதாளங்கள் முழங்க கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story