மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டம்


மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 7:54 PM GMT)

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

கரூர்,

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் ரங்கன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மண்டல பொது செயலாளர் ராஜராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிவரன்முறைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story