புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்துக் கொலை காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது
இரணியல் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். திருமணம் செய்த 4 மாதத்தில் அவரை தீர்த்து கட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அழகியமண்டபம்,
குமரி மாவட்டம் இரணியல் அருகே காடேற்றி பகுதியை சேர்ந்தவர் விஜிஸ் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஜூலை மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்து (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து விஜிஸ், சிந்துவை அழைத்துக்கொண்டு கோவைக்கு சென்றார். அங்கு இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு விஜிஸ் தன்னுடைய காதல் மனைவியை அழைத்துக்கொண்டு காடேற்றியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
நேற்று முன்தினம் விஜிஸ் பக்கத்து வீட்டில் உள்ள உறவினரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, உறவினரின் வீட்டின் முன்பு இருந்த பூஞ்செடிகள், தொட்டிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜிசின் உறவினர் இரவு இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், விஜிஸ் மதுபோதையில் தகராறு செய்து பொருட்களை சேதப்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அந்த நபரை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விஜிஸ் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் குருந்தன்கோடு அருகே பொட்டல்குளம் கரையில் ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அவர் யார்? என விசாரணை நடத்தியபோது கொலை செய்யப்பட்டவர் விஜிஸ் என்பது தெரிய வந்தது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த விஜிசின் காதல் மனைவியும், உறவினர்களும் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே விஜிஸ் உடலை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காடேற்றி பகுதியைச் சேர்ந்த நெல்சன் (32) என்ற தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
விஜிசிக்கும், நெல்சனுக்கும் அங்குள்ள குளத்தில் மீன்பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்துள்ளது. மேலும் கடந்த வாரம் நெல்சனின் செல்போன் அங்குள்ள குளத்துக்குள் விழுந்துள்ளது. அந்த செல்போனை விஜிஸ்தான் குளத்துக்குள் வீசியதாக நெல்சன் நினைத்துள்ளார். இதுதொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அதன்பிறகு இருவரும் நெருக்கமாகி கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நெல்சனும், விஜிசும் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நெல்சன், தான் வைத்திருந்த கத்தியால் ஆட்டை அறுப்பது போல்மது போதையில் இருந்த விஜிசின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விஜிஸ் பரிதாபமாக இறந்துள்ளார். அதன்பிறகு நெல்சன் அங்கிருந்து தப்பிச் சென்றதும், தற்போது அவர் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்துள்ளது.
காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story