எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு


எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 2018-10-23T02:33:14+05:30)

எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அ.தி.மு.க. தொடக்க விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் எம்.சிவா தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முரளி வரவேற்றார். முன்னாள் தொகுதி செயலாளர் பால்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கே.என்.ராஜேந்திரன், பி.வி.ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் தையல்நாயகி, நாகை நகர செயலாளர் தங்க. கதிரவன், மாவட்ட இளைஞர் பாசறையை சேர்ந்த டி.ஆர்.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. இவர்களின் வழிகாட்டுதல் படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அ.தி.மு.க. அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் தகுதி கிடையாது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க.தான். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தலைமை கழக பேச்சாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட இணை செயலாளர் மீனா, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.

Next Story