புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி இருளர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி இருளர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் ஒன்றியம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இருளர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

கிருஷ்ணகிரி,

பர்கூர் ஒன்றியம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இருளர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் - ஜெகதேவி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 33 குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இவை தற்போது முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மேற்கூரைகள் பெயர்ந்து அடிக்கடி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் கடும் இடநெருக்கடியால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.

மேலும் எங்கள் குடியிருப்புக்கு அருகில் வீடுகள் இல்லாதவர்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். எனவே எங்கள் வீடுகளை பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story