தாய் தமிழகத்தோடு இணைந்த நாள்: குமரி மாவட்டத்திற்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் பெரும் போராட்டத்திற்கு பிறகு 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த நாள், தாய் தமிழகத்துடன் குமரி இணைந்த நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக நவம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (10-ந் தேதி) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். வருகிற 1-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story