18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கும் - மைத்ரேயன் எம்.பி. பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கும் -  மைத்ரேயன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2018 4:00 AM IST (Updated: 24 Oct 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கும் என மைத்ரேயன் எம்.பி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மைத்ரேயன் எம்.பி. வந்திருந்ததார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, நீதிமன்ற விசாரணை முடிந்து நாளை(வியாழக்கிழமை) வருகிறது என்கிறார்கள். அந்த நாளை என்று என தெரியவில்லை. தீர்ப்பு சத்தியத்திற்கு கட்டுப்பட்ட தீர்ப்பாக இருக்கும். சத்தியம் எங்கள் பக்கம் உள்ளது. நாங்கள் வெற்றிபெறுவோம். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக தான் இருக்கும். தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் இந்த ஆட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உரிய காலத்தை ஜெயலலிதா வழியில் சென்று கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு நிறைவு செய்யும் என்றார். முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் கருத்து வேறுபாடு கிடையாது. கட்டை விரலுக்கும், அடுத்த விரலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அமைச்சர் ஜெயகுமார் ஆடியோ குறித்து அவரே தனது கருத்தை தெரிவித்துள்ளார். சட்டம் தன் கடமையை செய்யும். ‘மீ டூ’ பாலியல் புகார்களின் உண்மைத் தன்மை அறிந்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் விசாரிக்க முறையான அமைப்பு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story