ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய தொழிலாளர்கள் கருப்புகொடி ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய தொழிலாளர்கள் கருப்புகொடி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:00 AM IST (Updated: 24 Oct 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே கைவிடக்கோரி, விவசாய தொழிலாளர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்,

காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகே கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பிச்சையன் முன்னிலை வகித்தார்.

தேசிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ராமமூர்த்தி, மாநில தலைவர் பாலகிருஷ்ணன், கன்வீனர் பெருமாள், மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி, துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிடவேண்டும். தீபாவளியை முன்னிட்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 200 நட்களாக மாற்றி, தினசரி கூலியை ரூ.500 ஆக உயர்த்தவேண்டும். காவிரிநீர் கடைமடை பகுதிக்கு வருவதை உறுதி செய்யவேண்டும். விவசாய தொழிலாளர்கள் நலவாரியத்தை உடனே நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Next Story