குப்பைகளை அகற்ற கோரி நாம் தமிழர் கட்சியினர் மறியல் போக்குவரத்து பாதிப்பு
குப்பைகளை அகற்ற கோரி கரூரில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்,
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டதால் கரூர் செங்குந்தபுரம் 1-வது கிராஸ் பகுதியிலுள்ள ஜவுளி, கொசுவலை, நிதி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பை கழிவுகள் ஆங்காங்கே சாலையோரம் கொட்டப்பட்டு கிடந்தன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த குப்பைகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் புகார் செய்தனர். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
குப்பைகளை அகற்றும் பணியில்...
அப்போது, கரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிற போதிலும் பண்டிகை காலங்களில் தெரு பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குப்பையில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாக வாய்ப்பிருக்கிறது. எனவே செங்குந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் உள்பட போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குப்பைகளை உடனே அகற்றிவிடுவதாக உறுதியளித்தனர். பின்னர் கரூர் நகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சாலையோரமாக தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றினர். இந்த சம்பவத்தினால் செங்குந்தபுரம் மெயின்ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story