வேலைவாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 2 பேர் கைது


வேலைவாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2018 4:15 AM IST (Updated: 24 Oct 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் குண்டல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டியில் வேலைவாங்கி தருவதாக அழைத்து செல்லப்பட்ட 2 இளம் பெண்களை சிலர் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த 2 இளம்பெண்களை மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தொடர்பாக கார்த்திகேயன், சரவணன் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story