நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது


நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 25 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நாகையில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை அவுரித்திடலில் நேற்று சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கேபில் குமார், மாவட்ட துணை தலைவர்கள் சுப்பு, துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிவசேனா மாநில அமைப்பாளர் தங்க.முத்துகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

மறுபரிசீலனை

ஆர்ப்பாட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் செல்ல அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும், அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக அவசர சட்டம் இயற்றக்கோரியும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் காரைக்கால் மாவட்ட இளைஞர் அணி தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story