ஆட்டோ கடனுக்கு பரிந்துரைக்க ரூ.3,200 லஞ்சம்: தாட்கோ மேலாளர் பணி இடைநீக்கம்
நாமக்கல்லில் மானிய விலையில் ஆட்டோ வாங்க, வங்கி கடன் உதவிபெற பரிந்துரை செய்வதற்கு ரூ.3,200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 46). இவர் பயணிகள் ஆட்டோவை மானிய கடன் உதவியுடன் வாங்க நாமக்கல் மாவட்ட தாட்கோ அலுவலகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து கணேசனுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்க, வங்கிக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப மேலாளர் சக்திவேல் அவரிடம் ரூ.3,200 லஞ்சம் கேட்டார். அந்த பணத்தை கடந்த 17-ந் தேதி நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகம் வந்து அங்கிருந்த புரோக்கர் பொட்டணத்தை சேர்ந்த வரதராஜன் (50) என்பவரிடம் கணேசன் கொடுத்தார். வரதராஜன் அந்த பணத்தை மேலாளர் சக்திவேலிடம் கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலாளர் சக்திவேல் மற்றும் புரோக்கர் வரதராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து மேலாளர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் தாட்கோ அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். போலீசாரின் பரிந்துரையை ஏற்று தாட்கோ மேலாண்மை இயக்குனர் சஜன்சிங் சவான் லஞ்ச வழக்கில் கைதான மேலாளர் சக்திவேலை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story