மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3,799 பேருக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3,799 பேருக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2018 5:19 AM IST (Updated: 25 Oct 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3,799 பேருக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 515 பேருக்கு ரூ.4 கோடியே 47 லட்சமும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 292 பேருக்கு ரூ.8 லட்சத்து 76 ஆயிரமும், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 289 பேருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் காதொலிக்கருவிகள், கருப்பு கண்ணாடிகள், பிரெய்லி கைக்கெடிகாரம், தையல் எந்திரங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 799 பேருக்கு ரூ.5 கோடியே 49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story