புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு பணியில் 840 பணியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
மாவட்டத்தில், நோய் தடுப்பு பணியில் 840 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு டெங்கு மற்றும் இதர காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரத்திற்கு 20 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீதம் 260 பணியாளர்கள் ஊராட்சி ஒன்றியம் மூலமாகவும், சுகாதாரத்துறையின் மூலம் வட்டாரத்திற்கு 10 தற்காலிக பணியாளர்கள் 130 பேரும், 8 பேரூராட்சிகளிலும் தலா 10 பணியாளர்கள் வீதம் 80 பணியாளர்களும், நகராட்சி பகுதியில் 370 தற்காலிக பணியாளர்களும் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 840 பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு பொது மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவட்டம் முழுவதும் கடந்த 30 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. 13 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கான காரணத்தை உடனடியாக அறிந்து கொள்ளும் ரத்த அணுக்கள் கணக்கீட்டு எந்திரம் பயன்பாட்டில் உள்ளது.
இதனால் காய்ச்சலுக்கான காரணத்தை ஒரு நிமிடத்திற்கு உள்ளாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதுமான அளவில் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளது.
யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக மருந்து கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதையும், முறையாக படித்து, பயிற்சி பெறாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story