தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை - தானே கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை - தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 9:30 PM GMT (Updated: 25 Oct 2018 8:55 PM GMT)

தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தானே, 

தானே மாவட்டம், மும்ரா கவுசா பகுதியில் உள்ள துணி ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் இம்ரான் சேக் (வயது30). இவருக்கும் அதே ஆலையில் வேலை பார்த்து வந்த முகமது தாவூத் சேக்கிற்கும் (33) இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி தொழிலாளிகள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமது தாவூத் சேக், இம்ரான் சேக்கை 12 முறைகளுக்கு மேல் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது தாவூத் சேக்கை கைது செய்தனர். மேலும் அவர் மீது தானே மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, முகமது தாவூத் சேக் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எம். பட்வர்தன், குற்றம் சாட்டப்பட்ட முகமது தாவூத் சேக்கிற்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story