நாகர்கோவிலில் அரசு பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டம் பயணிகள் அவதி
நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து, மற்ற டிரைவர்கள் திடீரென பஸ்களை இயக்க மறுத்ததால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அதிலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் குவிவதால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். இங்கு அரசு பஸ், மினி பஸ் டிரைவர்களிடையே குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்குவதில் தகராறு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சேனம்விளைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட தயாரானது. பஸ்சை சண்முகம் என்பவர் இயக்கினார். அப்போது அரசு பஸ் முன் ஒரு மினி பஸ் வேகமாக வந்து நின்றது. இதனால் அரசு பஸ் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது. அரசு பஸ் டிரைவர் பல முறை ஒலி எழுப்பியும், மினி பஸ் அங்கிருந்து செல்லவில்லை. ஆனால் தொடர்ந்து ஒலி எழுப்பியதால் ஆத்திரத்தில் மினி பஸ் டிரைவர் வேகமாக இறங்கி வந்து சண்முகத்தை தாக்கியதாக தெரிகிறது. இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் அனைத்து டிரைவர்கள் மத்தியிலும் பரவியது. இதைத் தொடர்ந்து அரசு பஸ் டிரைவர்களுக்கும், மினி பஸ் டிரைவர்களுக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. அரசு பஸ் டிரைவர்கள் அனைவரும் பஸ்களை இயக்க மறுத்து போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் 7 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. இதனால் பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டு இருந்தன. போராட்டம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து பயணிகளும் அவதிக்குள்ளானார்கள். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்த கோட்டார் போலீசார் விரைந்து சென்று டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, டிரைவர் சண்முகத்தை தாக்கிய மினி பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு பஸ் டிரைவர்கள் கூறினர். மேலும், மினி பஸ்கள் தடம்மாறி இயங்குவதாகவும், அண்ணா பஸ் நிலையத்தில் மினி பஸ்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல் அரசு பஸ் நிறுத்தும் இடங்களில் மினி பஸ்களை நிறுத்தவதாகவும் போலீசாரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதோடு சண்முகத்தை தாக்கியவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அரசு பஸ் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு மீண்டும் பஸ்களை இயக்க தொடங்கினர். இதனையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே காயமடைந்த அரசு பஸ் டிரைவர் சண்முகம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Related Tags :
Next Story