வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கியவர் கைது


வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 5:00 AM IST (Updated: 29 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரத்தில் அந்த நாய் மற்றும் அதை நடைபயிற்சிக்கு அழைத்து வந்த பெண்ணை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த உள்ளகரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சுகுணா(வயது 38). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நாயுடன் அந்த தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியில் உள்ள சக்தி என்ற ஸ்ரீதர்(49) என்பவரது வீட்டின் முன்பு, நாய் சிறுநீர் கழித்தது. இதைகண்ட ஸ்ரீதர், சுகுணாவிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அருகில் இருந்த பிளாஸ்டிக் குழாயால், தனது வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாய் மற்றும் அதனை நடைபயிற்சிக்கு அழைத்து வந்த சுகுணா இருவரையும் சரமாரியாக தாக்கினார்.

இதை கண்ட அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, ஸ்ரீதரை தடுத்து நிறுத்தியதுடன், சுகுணாவையும் மீட்டனர். இதுபற்றி பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை நேற்று மாலை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Next Story