ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2,500 டன் ரே‌ஷன் அரிசி நெல்லைக்கு வந்தது


ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2,500 டன் ரே‌ஷன் அரிசி நெல்லைக்கு வந்தது
x
தினத்தந்தி 31 Oct 2018 10:00 PM GMT (Updated: 31 Oct 2018 11:49 AM GMT)

ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 500 டன் ரே‌ஷன் அரிசி நெல்லைக்கு வந்தது.

நெல்லை,

ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 500 டன் ரே‌ஷன் அரிசி நெல்லைக்கு வந்தது.

ரே‌ஷன் அரிசி

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான ரே‌ஷன் அரிசி வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரே‌ஷன் அரிசி கொண்டு வரப்படுகிறது.

2,500 டன்

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 டன் ரே‌ஷன் அரிசி சரக்கு ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மொத்தம் 42 பெட்டிகளில் ரே‌ஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

அந்த மூட்டைகள் லாரி மூலம் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு அடுக்கி வைக்கப்படுகின்றன. பின்னர் அங்கு இருந்து தேவைக்கு ஏற்ப ரே‌ஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.


Next Story