3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 85 பெண்கள் உள்பட 100 பேர் கைது
நாகையில் 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் நடத்திய சாலை மறியலில் 85 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்,
சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார்.
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, மாவட்ட பொருளாளர் துர்க்காம்பிகா, இணை செயலாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல், செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து நாகை கலெக்டர் அலுவலக முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 85 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story