திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டம் - மடிக்கணினிகளை ஒப்படைத்தனர்


திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டம் - மடிக்கணினிகளை ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 1 Nov 2018 4:30 AM IST (Updated: 1 Nov 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மடிக் கணினிகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவாரூர்,

இணையதள வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை திருவாரூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று தலைமையிடத்து துணை தாசில்தார் கணேசனிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் கிராம உதவியாளர்களும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நாளில் வருவாய் கிராம உதவியாளர்களும், கிராம நிர்வாக அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த்துறை தொடர்பான பணிகள் தேக்கம் அடைந்தன.

சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதேபோல நீடாமங்கலத்திலும் கிராம நிர்வாக அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story