ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு


ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Nov 2018 4:29 AM IST (Updated: 1 Nov 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை வன் கொடுமை தடுப்பு கோர்ட் உத்தர விட்டது.

சிவகங்கை,

திருப்புவனத்தை அடுத்த கணக்கன்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது68). இவர் சிறப்பு சப்– இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை திருப்புவனத்தை அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன்(48) என்பவர் முன் விரோதம் காரணமாக கடந்த 25.7.2008 அன்று அவரது சாதியை குறித்து பேசி தாக்கினாராம்.

இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தனியரசு, குற்றம் சாட்டப்பட்ட கருப்பணனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதேபோல் திருப்பத்தூர் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு (32) என்பவரை சாதியை சொல்லி திட்டியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன்(53) என்பவர் மீது நாச்சியாபுரம் போலீசார் சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தனியரசு, குற்றம் சாட்டப்பட்ட முத்துராமனுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Next Story