3–வது நாளாக சாலை மறியல்: ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் 959 பேர் கைது


3–வது நாளாக சாலை மறியல்: ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் 959 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2018 4:59 AM IST (Updated: 1 Nov 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 3–வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 959 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவைத்தொகை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோட்டில் முதல் நாள் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 984 பேரும், 2–ம் நாள் போராட்டத்தில் 1,004 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், நேற்று 3–வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான சத்துணவு ஊழியர்கள் ஒன்று திரண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடி ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 900 பெண்கள் உள்பட 959 பேரை கைது செய்து ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story