மாவட்ட செய்திகள்

வாரச்சந்தை பூட்டை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு + "||" + Weekly broke the market lock Authorities Furore

வாரச்சந்தை பூட்டை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு

வாரச்சந்தை பூட்டை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு
மானாமதுரை வாரச்சந்தையின் பூட்டை அதிகாரிகள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை, 

மானாமதுரை வாரச்சந்தை வாரம் தோறும் வியாழக் கிழமை நடைபெறுகிறது. இங்கு காய்கறிகள், பழங்கள், மீன், கருவாடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் வாங்கி செல்கிறார்கள். இந்த சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வருகின்றனர்.

இங்கு நிரந்தர கடைகளுக்கு 300 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையும், தற்காலிக கடைகளுக்கு 50 முதல் 200 ரூபாய் வரையும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதுதவிர மூட்டைகளுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சந்தைக்கு குறைந்த பட்சம் 3 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வசூலாகும். கடந்தாண்டு சத்தியேந்திரன் என்பவர் 86 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து சந்தையை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந் தேதியுடன் சந்தை ஒப்பந்தம் முடிவடைந்ததால் சந்தையை பேரூராட்சி நிர்வாகமே நடத்த முடிவு செய்தது. ஏற்கனவே ஒருமுறை வாரச்சந்தை ஏலம் நடந்த போது ஒப்பந்தகாரர்கள் குறைந்த தொகையில் இருந்து ஏலம் ஆரம்பிக்க வேண்டு என கோரிக்கை விடுத்தனர். அதை அதிகாரிகள் ஏற்க மறுத்து ஏலத்தை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாரச்சந்தை சாவியை ஒப்பந்த தேதி முடிந்ததும் ஒப்பந்தகாரரிடம் அதிகாரிகள் வாங்க மறந்து விட்டனர். நேற்று காலை வாரச்சந்தையில் வியாபாரம் செய்ய ஏராளமான வியாபாரிகள் வந்த போது சந்தை பூட்டு போடப்பட்டிருந்தது. இதனையடுத்து செயல் அலுவலர் ஜான் முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் போலீசாரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் பூட்டை உடைத்து வாரச்சந்தையை நடத்தினர். அதிகாரிகள் பூட்டை உடைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஒப்பந்தகாரர் சத்தியேந்திரன் கூறுகையில், 86லட்சம் ரூபாய்க்கு மேல் ஏலம் எடுத்தும் கடுமையான நஷ்டத்தில் தான் சந்தை நடந்தது. அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு வழங்கிய கடிதத்தில் இந்த மாதம் (நவம்பர்) 31-ந் தேதி வரை சந்தையை நடத்தலாம் என தெரிவித்து இருந்தனர். அந்த கடிதமும் என்னிடம் இருக்கின்றது என்றார்.

அதே போல கடந்த மாதம் 31-ந் தேதி வரை பேரூராட்சி அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்காமலும், சாவியை திரும்ப தர வேண்டும் என்று என்னிடம் கேட்கவும் இல்லை என்றார்.

இதுபற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கூறுகையில். கடந்த மாதம் 31-ந் தேதியுடன் ஒப்பந்தகாலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் ஒப்பந்த காலம் செப்டம்பர் மாதம் வரை என்று கடிதத்தில் தேதியை தவறாக குறிப்பிட்டு விட்டோம் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி அரசு நீடிப்பது பற்றி அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேச்சு
கர்நாடகத்தில் கூட்டணி அரசு நீடிப்பது பற்றி அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
2. நேபாளத்தில் தந்தையான 5ம் வகுப்பு மாணவனின் திருமணத்தினை பதிவு செய்வதில் அதிகாரிகள் குழப்பம்
நேபாளத்தில் தந்தையான 5ம் வகுப்பு மாணவனின் திருமணத்தினை பதிவு செய்வது எப்படி என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
3. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் திருச்சி வந்தனர்
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் ரெயிலில் திருச்சி வந்தனர்.