அய்யப்ப பக்தர்களுக்கு கேரள அரசு நெருக்கடி கொடுக்க கூடாது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


அய்யப்ப பக்தர்களுக்கு கேரள அரசு நெருக்கடி கொடுக்க கூடாது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2018 4:30 AM IST (Updated: 4 Nov 2018 8:06 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை விவகாரத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு கேரள அரசு நெருக்கடி கொடுக்க கூடாது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

களியக்காவிளை,

குமரி மாவட்ட சேவா பாரதி அமைப்பு சார்பில் மலைவாழ் மக்களுக்கான தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இதில் ஸ்ரீனிவாச கண்ணன் தலைமை தாங்கினார். வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சாமிகள் சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

விழாவில் மலைவாழ் கிராம மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

சபரிமலை விவகாரத்தில் பெரும்பான்மையான பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும். சபரிமலையை கலவர பூமியாக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கேரளாவில் நடந்தது. இதில் எந்த மாநில அமைச்சர்களும் கலந்து கொள்ள வில்லை. இதன்மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் கேரள அரசின் உள்நோக்கம் புரிகிறது.

சபரிமலை கேரள அரசுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் சொந்தம். எனவே அய்யப்ப பக்தர்களுக்கு கேரள அரசு நெருக்கடி கொடுக்க கூடாது.

பட்டாசு வெடிப்பது தொடர்பாக நான் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கவில்லை.  மக்களின் போராட்டத்தை கருத்தில்    கொள்ள வேண் டும். பட்டாசு வெடிப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளே. அதை போன்று நீதிமன்றத்தை நான் அவமதித்தது தொடர்பான குற்றச்சாட்டு எழுப்புவர்களும் குழந்தை தனம் கொண்டவர்கள் தான். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்மந்த பட்ட 7 குற்றவாளிகளை விடுவிப்பது சம்மந்தமாக மத்திய அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறுவது தவறு. கவர்னர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல் பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story