வேலூர் மாவட்டத்தில் நலிவடைந்த தோல் தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை ஏற்றுமதி சபையின் செயல் அலுவலர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள தோல் தொழிற்சாலைகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி சபையின் செயல் அலுவலர் செல்வம் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தோல் தொழிற்சாலைகளின் பிரச்சினைகளை களைந்து தோல் தொழிலை ஊக்குவித்திட, தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் முன்னிலை வகித்தார்.
இதில் மத்திய ரசாயனம் மற்றும் ஆயுத துறை இணை செயலாளர் சுதன்குப்தா, இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி சபையின் செயல் அலுவலர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.
கூட்டத்தில் இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதியின் செயல் அலுவலர் செல்வம் பேசியதாவது:-
அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், நலிவடைந்தநிலையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை களைந்து மீண்டும் தொழில்களை தொடங்கிட 100 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும் என்ற செயல் திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் அந்தந்தப்பகுதிகளில் நலிவடைந்த நிலையில் தொழில் நிறுவனங்களை அழைத்து பேசி மீண்டும் தொழில் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் அந்தந்த பகுதிகளில் நலிவடைந்த நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களை அழைத்து மீண்டும் தொழில் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோல் தொழில் இந்தியாவிலேயே 60 சதவீத அன்னிய செலாவணியை தமிழகம்தான் பெற்றுக்கொடுத்து வருகிறது.
இதில் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் 90 சதவீத தோல் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள நிறுவனங்களை மேம்படுத்திடவே வேலூர் மாவட்டத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. தோல் தொழிலில் இந்தியாவில், தமிழகம் 60 சதவீத பங்களிப்பை கொடுத்து வருகிறது.
இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்கள் பணியாற்றி வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். இதில் தமிழகத்தில் 30 சதவீதம் பெண்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, ஆம்பூர், ரணிப்பேட்டை, வாணியம்பாடி, பேரணாம்பட்டு, வேலூர், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இவைகளில் முன்னணி மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தின் தோல் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தை இயக்குவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தால் உடனுக்குடன் கண்காணிப்பு அலுவலர் வாயிலாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.சிங், இந்தியன் வங்கி மண்டல பொது மேலாளர் சுந்தர்ராஜன், கனரா வங்கி கூடுதல் பொது மேலாளர் திலக்ராஜன், ஸ்டேட் வங்கி கூடுதல் பொது மேலாளர் சேதுமுருகதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story