தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாக்குடி ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழி அருகே கன்னியாக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெரு, தெற்கு தெரு, காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட பகுதிகளில் மின்விபத்தை ஏற்படுத்தும் வகையில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. அப்பகுயில் உள்ள பொதுமக்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை தற்காலிகமாக காய்ந்த மரங்களை கொண்டு கட்டி வைத்துள்ளனர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் எந்த நேரம் வேண்டுமானலும் மின்விபத்துகள் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கன்னியாக்குடி ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேபோல் கதிராமங்கலம், வள்ளுவக்குடி, கொண்டல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாகவும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் உள்ளதால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

Related Tags :
Next Story