மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.18½ கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு + "||" + Rs 18½ crore fraud victims held by the finance company filed a police suicide office

நிதி நிறுவனம் நடத்தி ரூ.18½ கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

நிதி நிறுவனம் நடத்தி ரூ.18½ கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.18½ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,

குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியை சேர்ந்த செல்வராஜன் (வயது 50), திற்பரப்பு அருகில் உள்ள தோதாத்துவிளையை சேர்ந்த ராஜேஸ்வரி அம்மா (52), நாகர்கோவில் அருகே பாம்பன்விளையை சேர்ந்த சக்திவேல் (36) உள்பட ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–


குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு “திருமருதூர் அக்ரோ டெவலப்பர்ஸ் இந்தியா லிமிடெட்’’ என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் 7 பேர் நிர்வாகிகளாக செயல்பட்டனர். குமரி மாவட்டத்தில் முகவர்கள் மூலமாக பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி தவணை முறையில் ரூ.60 ஆயிரம் செலுத்தினால் 5 ஆண்டுகள் முடியும் தருவாயில் ரூ.90 ஆயிரம் பணமாகவோ, அதற்கு ஈடாக பொதுமக்களுக்கு 10 சென்ட் நிலமாகவோ கொடுக்கப்படும் என்று சொல்லி பணம் வசூலித்தனர்.

இதை நம்பி நாங்கள் உள்பட 3,700 பேர் முகவர்கள் மூலமாகவும், நேரடியாகவும் பணம் செலுத்தினோம். அதற்கான ரசீது மற்றும் பாண்ட் ஆகியவற்றை நிதி நிறுவனம் நடத்தியவர்கள் தந்தார்கள். 5 வருடம் முடிந்த பிறகும் பணம் செலுத்தியவர்களுக்கு நிதி நிறுவனத்தினர் கூறியபடி பணத்தையோ, நிலத்தையோ கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதற்கிடையே அந்த நிதி நிறுவனம் போலி நிதி நிறுவனம் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.

இந்தநிலையில் நிர்வாகிகள் அலுவலகத்தை பூட்டி விட்டு அவரவர் சொந்த ஊரான மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தலைமறைவாகி விட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டால் தருகிறோம், தருகிறோம் எனக்கூறி ஏமாற்றினர். எங்கள் அனைவருக்கும் நிதி நிறுவனத்தினர் தர வேண்டிய மொத்த தொகை ரூ.18 கோடியே 50 லட்சம் ஆகும். தற்போது தொலைபேசியில் பணம் கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனவே போலி நிதி நிறுவனம் நடத்தி எங்களுடைய பணத்தை ஏமாற்றி சென்ற நிதி நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் மனு மீது அவசர விசாரணை; மத்திய–மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
‘கஜா’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் மனுவை அவசர வழக்காக மதுரை ஐகோர்ட்டு நேற்று எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
2. கருங்கல் பேரூராட்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது கலெக்டரிடம் மனு
கருங்கல் பேரூராட்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
3. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தியில் பூச்சி தாக்குதல் கள ஆய்வு நடத்த வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் தாலுகா அய்யலூர் குடிக்காடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி ஆகியவை பூச்சி தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு கள ஆய்வு நடத்த அதிகாரிகள் வர வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
4. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க கலெக்டரிடம் இளைஞர்கள் மனு
குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
5. தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.