பாபநாசம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் சிறை கைதிகளுக்கு காசநோய் பரிசோதனை கலெக்டர் தகவல்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம், பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கிளைச்சிறைகளில் உள்ள கைதிகளுக்கு காசநோய் மற்றும் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையின் காச நோய் தடுப்பு பிரிவு சார்பில், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அதிநவீன நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் காசநோயை கண்டறிவதற்கான அதிநவீன கருவிகள் மற்றும் பரிசோதனை கருவிகள் உள்ளன. இந்த அதிநவீன நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனத்தில் இருக்கும் பணியாளர் கைதிகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு காசநோய் உள்ளதா என கண்டறிந்து சான்றளிப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் காச நோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டாக்டர் மாதவி, மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story