பாதை வசதி கேட்டு வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்


பாதை வசதி கேட்டு வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2018 4:00 AM IST (Updated: 8 Nov 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

வயலில் இறங்கி தங்களுக்கு தனிபாதை வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே உள்ள பொறக்லக்குடி கிராமத்தில் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு சென்று வர கடந்த பல ஆண்டுகளாக தனி பாதை இருந்தது. இந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வயலுக்கு செல்ல பாதை வசதி இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கும்பகோணம் உதவி கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதன்பேரில் நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டர் அப்போதைய தாசில்தாருக்கு உத்தரவிட்டார். ஆனால் விவசாயிகளுக்கு வயல்களுக்கு செல்ல பாதை வசதி கிடைக்கவில்லை. . இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று அவர்களது வயலில் இறங்கி தங்களுக்கு தனிபாதை வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story