பெரம்பலூரில், இன்று கண்டன பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்


பெரம்பலூரில், இன்று கண்டன பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் இன்று நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் பெரம்பலூர்-அரியலூர் சாலை, ஒதியம் கைகாட்டியில் உள்ள கலைஞர் நகர் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு நான் (குன்னம் ராஜேந்திரன்) தலைமை தாங்குகிறேன். அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் வரவேற்புரையாற்றுகிறார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய-மாநில அரசுகளை கண்டித்து சிறப்புரையாற்றுகிறார். இதில் முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா ஆகியோரும் பேசுகின்றனர். எனவே இந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

பெரம்பலூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் கண்டன பொதுக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக பெரம்பலூர் ஒதியம் கைகாட்டி கலைஞர் நகரில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர், அரியலூர் நகர பகுதிகளில் மு.க.ஸ்டாலினை வரவேற்று விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. கட்சி கொடியும் நகர் முழுவதும் பறக்க விடப்பட்டுள்ளன.

Next Story