தீபாவளியன்று கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 16 பேர் மீது வழக்கு


தீபாவளியன்று கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 16 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 8:05 PM GMT)

தீபாவளி அன்று கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை,

தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத் தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது. இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோளும் விடுத்திருந்தது. தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் இதுதொடர்பாக கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளியன்று கோர்ட்டு உத் தரவை மீறி பட்டாசு வெடித்ததாக திருமயம், புதுக்கோட்டை டவுன், கணேஷ்நகர், ஆலங்குடி, கீரமங்கலம், வடகாடு, கே.புதுப்பட்டி, மாத்தூர், அன்னவாசல், அறந்தாங்கி, நாகுடி ஆகிய போலீஸ் நிலையங்களில் மொத்தம் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story