மது குடிக்க பணம் தராததால் கிராம நிர்வாக அலுவலர் தீக்குளித்து தற்கொலை


மது குடிக்க பணம் தராததால் கிராம நிர்வாக அலுவலர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Nov 2018 3:30 AM IST (Updated: 9 Nov 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க பணம் தராததால் கிராம நிர்வாக அலுவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு விஷ்ணுவாசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 27). இதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மது குடித்து விட்டு வரும் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். அடிக்கடி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் மது குடிக்க பணம் கேட்டு வந்தார்.

கடந்த 3-ந்தேதி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர்கள் மது குடிக்க பணம் கொடுக்க வில்லை.

தற்கொலை

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அவர்களை மிரட்டுவதற்காக அங்கிருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story