மாவட்ட செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலி - மூளை,மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு + "||" + 2 people killed in swine flu in hospital in Kovai hospital - 2 dead for brain and mysterious fever

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலி - மூளை,மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலி - மூளை,மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள். மூளை, மர்ம காய்ச்சலுக்கு2 பேர் இறந்தனர்.
கோவை,


கோவை போத்தனூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 52). தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை இ.பி.காலனியை சேர்ந்தவர் சுரேந்திரன் (65). இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து இவர் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சோதனைகளை நடத்திய டாக்டர்கள் அவர் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் புதுக்காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (62). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த வாரம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். அவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கருமத்தம்பட்டி ராயர்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் மூளைக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 84 பேரும் என மொத்தம் 97 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளி வெட்டிக்கொலை - தம்பி கைது
மது குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
2. சேலத்தில் பரபரப்பு: தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - தண்டவாளத்தில் உடல் வீச்சு
சேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தண்டவாளத்தில் வீசப்பட்ட அவருடைய உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம் 2½ கோடிக்கு ஏலம்
மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம், 2½ கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
4. கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி
கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
5. கோவையில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி
கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.