விருதுநகர் மாவட்டம், பன்றிக்காய்ச்சலுக்கு இளம்பெண் உள்பட 2 பேர் சாவு
விருதுநகர் மாவட்டம், பன்றிக்காய்ச்சலுக்கு இளம்பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் அருண்(வயது 32). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பரளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா. இவருடைய மனைவி ஜீவிதா(19). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இவர் கடந்த 5-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
Related Tags :
Next Story