நில அபகரிப்பு வழக்கில் இருந்து தொழில்அதிபரை விடுவிக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது


நில அபகரிப்பு வழக்கில் இருந்து தொழில்அதிபரை விடுவிக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 10:39 PM GMT)

நில அபகரிப்பு வழக்கில் இருந்து தொழில்அதிபரை விடுவிக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அமலாக்கப்படை சப்-இன்ஸ்ெ்பக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-பெங்களூரு,

நில அபகரிப்பு வழக்கில் இருந்து தொழில்அதிபரை விடுவிக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அமலாக்கப்படை சப்-இன்ஸ்ெ்பக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்அதிபர் மீது வழக்கு

பெங்களூருவில் வசித்து வரும் தொழில்அதிபர் ஒருவர், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த தொழில்அதிபர் மீது மாநகராட்சியின் அமலாக்கப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு குறித்து தொழில்அதிபரிடம், மாநகராட்சி அமலாக்கப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தினார்.

அப்போது இந்த வழக்கில் இருந்து தொழில்அதிபரை விடுவிக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தொழில்அதிபரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, தொழில்அதிபரிடம் இருந்து முதலில் ரூ.20 ஆயிரத்தை சிவக்குமாரின் உதவியாளர் சேத்தன் பெற்றார். மீதி ரூ.50 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் கொடுப்பதாக தொழில்அதிபர் தெரிவித்து இருந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கைது

ஆனால் மேலும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க விரும்பாத தொழில்அதிபர், சிவக்குமார் மீது ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் போலீசார்கூறிய அறிவுரையின்படி சிவக்குமாரை சந்தித்து ரூ.50 ஆயிரத்தை தொழில்அதிபர் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல, சிவக்குமாரின் உதவியாளரான சேத்தனும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கைதான 2 பேர் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story