மாவட்ட செய்திகள்

சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு + "||" + Electronic voting machines have been sent from Salem to Hyderabad

சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு

சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 3,490 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,748 கட்டுப்பாட்டு எந்திரங்களும், சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 95 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 27 கட்டுப்பாட்டு எந்திரங்களும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அலுமினியம் மூடிகளை இரும்பு மூடிகளாக மாற்றுவதற்காக ஐதராபாத்தில் உள்ள இ.சி.ஐ.எல்.நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


இதையடுத்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் அரசு கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 கன்டெய்னர் லாரிகள் மூலம் 2 துணை தாசில்தார்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமியின் கொலை வழக்கில் சிறுமியின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் முயற்சியை போலீசார் எடுத்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் குடும்பத்திற்கான தேவைகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை முறையில் எந்த விதமான அசம்பாவிதங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது
சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. சேலத்தில் 16 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து - வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
சேலத்தில் 16 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றுகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
3. சேலம் ஜான்சன்பேட்டையில் பரபரப்பு: மயானத்திற்கு பூட்டுபோட முயன்ற பொதுமக்கள்
சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள மயானத்திற்கு பூட்டு போட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
4. இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
5. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு குறித்து மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு
‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்’ என்று சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.