வெங்கடசமுத்திரத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


வெங்கடசமுத்திரத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 3:30 AM IST (Updated: 10 Nov 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெங்கடசமுத்திரத்தில் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெங்கடசமுத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கவுதமன் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, பாஸ்கர், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். டி.டி.வி.தினகரன் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்கள்தான் வெற்றிபெற போகிறார்கள், என்றார்.

கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணைசெயலாளர் ஆர்.ஆர்.முருகன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில தலைவர் பாலு, வக்கீல் அணி மாநில துணைசெயலாளர் அசோக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் சாம்ராஜ், கருணாகரன், பார்த்திபன், சென்னகேசவன், நகர செயலாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story